ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்ற 1 கி.மீ. ரிவர்ஸ் எடுக்கப்பட்ட ரயில்

0 631

மகாராஷ்டிர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்டுக் காப்பாற்றுவதற்காக அந்த ரயில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ரிவர்ஸ் எடுக்கப்பட்டது.

பர்தண்டே (Pardhande), மாஹேஜி (Maheji) ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரயிலில் இருந்து ராகுல் பட்டீல் என்ற பயணி தவறி விழுந்தார்.

இதையடுத்து அவரது நண்பர்கள் சங்கிலியைப் இழுத்து ரயிலை நிறுத்தி ஓட்டுநர் குழுவுக்கு தகவலைத் தெரிவித்தனர். நடுவழியில் படுகாயங்களுடன் தவித்த அவரை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாத ஓட்டுநர் குழுவினர், ரயிலை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ரிவர்ஸ் எடுத்து ராகுலை மீட்டனர்.

ராகுலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. ரயில் ஒருமணி நேரம் தாமதமாகச் சென்றபோதும், பயணியை மீட்க மனிதாபிமானத்துடனும் சிறப்பாகவும் செயல்பட்ட ரயில் ஓட்டுநர் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments