பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் !

0 589

ஆந்திர மாநிலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர் ஒருவரை குச்சியால் அடித்துக் கொண்டிருக்க, அருகில் மேலும் சில மாணவர்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இச்சம்பவத்தை சக மாணவர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.

விசாகப்பட்டினம் அருகே அனகபல்லியில் இயங்கி வரும் பாஷ்யம் பள்ளியில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக விதிகளின்படி பள்ளி மாணவர்களை உடல் ரீதியாக தண்டிப்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ள போதும், இதுபோன்ற சம்பவங்கள் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments