காவல் உதவி ஆய்வாளர் வீட்டு கல்யாண நிகழ்ச்சியில் துணிகர கொள்ளை

0 306

சென்னையை அடுத்த பூந்தவல்லியில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் தங்கச்சாமி என்பவரின் மகளுக்கு இன்று திருமணம் நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குமணன்சாவடியில் உள்ள ஈவிபி திருமணமண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் மணப்பெண் தனது அறைக்கு சென்ற போது அங்கு வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பூந்தவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து மண்டபத்தில் உள்ள சிசிடிவி காமிரா உதவியுடன் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments