காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும்- இம்ரான் கான் நம்பிக்கை

0 307

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருதலைவர்களும் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் இரு நாடுகளும் பரஸ்பரம் தீர்க்க வேண்டிய பிரச்சினை என அதிபர் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதத்தில் தெரிவித்தார். மீண்டும் நேற்று டாவோசில் பாகிஸ்தான் பிரதமர் இமரான் கானை சந்தித்த போது, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

எனவே பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விவகாரத்தில் உதவ முடிந்தால் நிச்சயம் செய்வதாக டிரம்ப் தெரிவித்தார்.காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் டிரம்ப் இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், இம்ரான் கான் என்னுடய சிறந்த நண்பர் என கூறினார்.

அமெரிக்க அதிபருடனான சந்திப்பு குறித்து பதில் அளித்த இம்ரான்கான், காஷ்மீர் விவகாரம் மிக பெரிய பிரச்சனை என்றார். இந்த விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments