ஏரியில் 146 டால்பின்கள்..!

0 448

ஒடிஷா மாநிலத்தில் உள்ள சிலிக்கா ஏரியில், 146 ஐராவதி டால்பின்கள் காணப்பட்டதாக கணக்கெடுப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதன்முதலில் மியான்மரின் ஐராவதி ஆற்றில் காணப்பட்டதால், இவை  ஐராவதி டால்பின்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில், 1,165 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் உள்ள சிலிக்கா ஏரியில் இவை அதிகம் காணப்படுகின்றன.

image

இந்த ஏரியில், ஐராவதி டால்பின் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றன. அப்போது, ஏரியில் 146 டால்பின்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சுமார் 170 ஐராவதி டால்பின்கள் அந்த ஏரியில் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read : ஓட்டலுக்குள் நுழைந்து சுற்றி பார்த்துவிட்டு, சேட்டை செய்யாமல் திரும்பிய சமத்து யானை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments