மகளை மானபங்க செய்ய முயற்சித்த 4 பேர் மீது புகாரை திரும்பப் பெற மறுத்த தாயை வெட்டிய கொலைவெறிக் கும்பல்

0 706

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், வழக்கை வாபஸ் பெறக்கோரி அந்த சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

கான்பூரை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும்  ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், அதில் ஒருவன் மட்டும், சிறுமியின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று, வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளான். அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, சிறுமியின் தாயாரையும், அங்கிருந்த இன்னொரு பெண்ணையும் தாக்கினான்.

இதில் பலத்த காயமடைந்த சிறுமியின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், சிறுமியின் தாயார் தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments