மதுரை பேருந்து நிலையங்களுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டலால் தீவிர சோதனை - ஒருவர் கைது

0 220

மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களுக்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல்  விடுத்ததாக சென்னையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களில் இன்று காலையில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார், மதுரையில் உள்ள  மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சென்னை சூளைமேடு அருகேயுள்ள மன நல காப்பகத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments