மாமியார் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மருமகள்
Aug 11, 2025
குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா..?
Aug 11, 2025
BIG STORIES
ரூ.100 கோடி பணம்...80ஆயிரம் ஃபோட்டோ, வீடியோக்கள்..புத்த துறவிகளை கதி கலங்க வைத்த .. யார் அந்த பெண்?
Jul 20, 2025 06:21 AM
229
ரூ.100 கோடி பணம்..80ஆயிரம் ஃபோட்டோ, வீடியோக்கள்..புத்த துறவிகளை கதி கலங்க வைத்த .. யார் அந்த பெண்?
ஒட்டுமொத்த நாட்டின் நம்பிக்கையும் உலுக்கிய ஒரே ஒரு பெண்... 100 கோடி ரூபாய் பணம்... 80 ஆயிரம் அந்தரங்க ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள்..புத்த மத துறவிகளிடம் செய்தது என்ன? 300க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு விதிகளை மீறி துறவிகள், பெண்ணின் வலையில் விழுந்தது எப்படி? புத்தத் துறவிகளை குறி வைத்து நடத்தப்பட்ட ஹனிட்ராப் மோசடியின் பகீர் பின்னணி என்ன? தாய்லாந்து மன்னன் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் என்ன? விரிவாக பார்க்கலாம்.
அரசியல்வாதி, தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை குறி வைத்து, தங்களது பாலியல் வலையில் விழ வைத்து நடத்தப்படும் ஹனிட்ராப் மோசடிகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது அதில் புத்த துறவிகள் ஏராளமானோர் சிக்கியிருப்பது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாட் என அழைக்கப்படும் புத்தப்பிட்சுக்களுக்கான உயர் பதவியில் இருக்கக் கூடிய சுமார் 9 துறவிகளை தனது வலையில் விழவைத்து சுமார் 100 கோடி ரூபாய் வரை பணம் பறித்திருக்கிறார் அந்த பெண்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிரபல புத்தத் துறவிகள் மடத்தின் தலைவர் ஒருவர் திடீரென தனது துறவறத்தை விட்டு வெளியேறினார். இந்த தகவல் போலீசார் கவனத்திற்கு சென்றதையடுத்து, துறவியை யாரேனும் மிரட்டினார்களா? அல்லது துறவறத்தை கைவிட நெருக்கடி கொடுத்தார்களா? என்பது குறித்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
30 வயதுடைய விலாவன் எம்சாவத் என்ற பெண் ஒருவர், கடந்த ஆண்டு அந்த புத்தத் துறவியுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து தான் கர்பமாக இருப்பதாக பொய் கூறி, புத்த துறவியை மிரட்டி 72 லட்சம் பாட் கொடுக்க வேண்டும் எனக் கேட்டியிருக்கிறார். அந்த பெண் கொடுத்த அழுத்தம் காரணமாகதான், துறவி தனது துறவறத்தை விட்டு வெளியேறியதாகத் கூறப்படுகிறது.
இதற்கிடையே புத்த மதத்தின் கம்யூனிட்டியிலிருந்து கணக்கில் வராத பணங்கள் வெளியே போவதாகவும், இந்த பணங்கள் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தபடுவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அதைத்தொடர்ந்து விலாவன் எம்சாவத் வசித்து வந்த நோந்தபுரி பகுதியில் உள்ள வீட்டில் பாங்காக் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு, சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விலாவன் எம்சாவத், புத்த துறவிகளுடன் தனிமையில் இருந்தபோது அதனை ஃபோட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து வைத்திருக்கிறார்.
இவை அனைத்தும் துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை வைத்து விசாரணை நடத்தியதில் விலாவன் எம்சாவத், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதே முறையில் 9க்கும் மேற்பட்ட துறவிகளை மிரட்டி 385 மில்லியன் பாட் பணத்தைப் சுருட்டியிருக்கிறார். அதாவது இதன் இந்திய மதிப்பு 100 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்ட விலாவன் எம்சாவத்திடமிருந்து பெரும்பாலான பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில், துறவிகளுக்கு மிரட்டல் விடுத்த ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தாய்லாந்து புத்த மத அமைப்பை உலுக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து விதிகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் கடுமையான தண்டனைகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன், கிட்டத்தட்ட 100 துறவிகளை துறவரத்திலிருந்து வெளியேற்றியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு 81 துறவிகளுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தாய்லாந்தில் 90%க்கும் மேற்பட்ட மக்கள், புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். புத்த துறவிகள் மரியாதைக்குரியவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர். துறவறம் என்பது அவ்வளவு எளிதல்ல.. இந்த துறவறத்தில் இருப்பவர்கள், காலை எழுந்துக் கொள்ளும் நேரம் முதல் தியானம் செய்யும் முறை, சாப்பிடும் முறை, இரவு படுகைக்கு போவது வரை பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்களை கண்களுக்கு நேராக பார்க்க கூடாது, அவர்களை தொடக் கூடாது உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இருக்கின்றன. இந்த கட்டுபாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு சட்டத்தில் உள்ளன.
சரி அப்படி ஏனெனில் பதவி, ஆசை, அதிகாரம் என அனைத்தும் துறந்த, புத்தமத துறவிகளுக்கு எப்படி இவ்வளவு பணம்? வந்தது என கேள்வி எழலாம். பொதுவாக இந்த நாட்டில் துறவிகளுக்கு ஊதியம் என்று தனியாக ஏதும் வழங்கப்படாது. அதற்கு பதில் இவர்களுக்கு சிறிய அளவில், உதவித்தொகை மட்டுமே வழங்கப்படும். ஆனால் தாய்லாந்து நாட்டு மக்கள், தங்கள் பெரிதாக மதிக்கும் துறவிகளுக்கு நன்கொடையாக அவ்வப்போது வாரி வழங்கிவருகின்றனர்.
இந்த நிலையில், மக்களின் நன்கொடை பணம் தான், விலாவன் எம்சாவத்திற்கு சென்ற 100 கோடி ரூபாய் பணமா? என விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து புத்த துறவிகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால், அதன் நிர்வாக அமைப்பு துறவற விதிகளை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க உள்ளது.
தற்போது விலாவன் எம்சாவத்தின் ஹனி ட்ராப்பில் சிக்கிய 9க்கும் மேற்பட்ட துறவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றன. காவல் துறையினரின் விசாரணையின் மூலம் தான் விலாவன் எம்சாவத்தின் மற்றொரு பக்கம் என்ன? எதற்காக ஹனி ட்ராப்பில் ஈடுபட்டார்? அவர் பிண்ணனியில் இருப்பது யார்? என்ற முழு விவரமும் வெளிச்சத்திற்கு வரும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu