கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் டெல்லியில் கைது

0 520

கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை அடுத்த அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோர் ஜாமீனில் வெளி வந்த பின்னர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவருக்கும் பிணையில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும், 3 பேர் இருக்கும் இடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அம்பத்தூர் போலீசார் அறிவித்திருந்தனர்.

இதனிடையே தொலை பேசி உரையாடல்களை வைத்து, அவர்கள் பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு விரைந்த க்யூ பிரிவு போலீசார், முகமது ஹனீப்கான், அப்துல் சுபனால், இம்ரான்கான் ஆகியோரை கைது செய்தனர். சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோர் அங்கு இல்லாததால், தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில், டெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வஸிராபாத் (Wazirabad) பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஹிந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் 3 பேரும் நேபாளம் வழியாக பாகிஸ்தான் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட் 3 பேரையும் தமிழக போலீசார் அழைத்துவந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments