அதிகரிக்கும் கலப்பட உணவுகள்..!

0 260

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் முதல், ஹோட்டலில் விற்கும் உணவுகள் வரை நாளுக்கு நாள் கலப்படம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது என்பது காலம் காலமாக நீடித்து வருகிறது. பொருட்களின் எடையையும் அளவையும் கூட்ட பாதிப்பு குறைவான பொருட்களைக் கொண்டு கலப்படம் செய்யப்பட்டு வந்தன.

ஆனால் காலப்போக்கில் பெரிய அளவில் லாபம் பார்க்க எண்ணியவர்கள், உயிருக்கே ஊறு விளைவிக்கும் பொருட்களை உறுத்தலே இன்றி உணவுகளில் கலப்படம் செய்யத் தொடங்கினர். வணிகரீதியாகவும், கூடுதல் வருவாய் கருதியும் உணவுப்பொருட்களில் நடக்கும் கலப்படம் உடல் நலக்கேட்டுடன், உயிர் குடிக்கும் ஆபத்தையும் தருகிறது.

கலப்பட உணவுகள் தொடர்பாக புகாரளிக்க கடந்த 2017ம் ஆண்டு தமிழக உணவு பாதுகாப்பு துறை 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணை அறிமுகம் செய்தது. இந்த எண்ணில் தமிழகம் முழுவதும் உள்ள சாலையோர உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள், பேக்கரிகள், துரித உணகங்கள் வரையிலான ஹோட்டல் உணவுப்பிரியர்கள் புகார்களை அனுப்பி வருகின்றனர்.

சமையல் எண்ணை, வெண்ணைய், நெய், பழவகைகள், கேன் தண்ணீர், மளிகைப் பொருட்கள், தரம் குறைவான மிளகு என அத்தனை உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் இந்த எண்ணில் புகார்கள் வந்து குவிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு இந்த எண்ணிற்கு 245 புகார்கள் வந்த நிலையில், அது குறித்து அதிகாரிகள் சோதனையிட்டத்தில், கேன் குடிநீர், டீத்தூள், பால், சர்க்கரை, பழவகைகள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலும் கூட கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதைப்போன்று ஹோட்டல்கள் குறித்து வந்த புகார்கள் குறித்து அதிகாரிகள் சோதனை செய்ததில் கடந்த 2017ம் ஆண்டு சுமார் 20 சதவீதம் ஹோட்டல் உணவுகளில் தரம் குறைவாக இருப்பதும், அதுவே 2018ம் ஆண்டு 23 சதவீதமாக அதிகரித்து, 2019ம் ஆண்டு 27 சதவீதமாக உயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்ளை லாபம் சம்பாதித்து வெகு சீக்கிரத்தில் குபேரர் ஆகும் எண்ணத்தில் செயல்படும் முதலாளிகள், பொதுமக்களின் உடல்நலத்தை கொஞ்சமாவது கவனத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் செய்லபட வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments