நாளை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுமா? மிரட்டும் மழை

0 247

சென்னையில் தொடரும் மழையால் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி  நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டி பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியில் கனமழை தொடர்ந்தால் போட்டி ரத்து செய்யப்படவோ அல்லது ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்பு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments