"ஐந்து கண்கள்" என்ற அமைப்பை கட்டமைக்க அமெரிக்கா முயல்வதாக தகவல்

0 313

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, புதிய "ஐந்து கண்கள்" என்ற,  அமைப்பை உருவாக்க, அமெரிக்கா முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே, "ஐந்து கண்கள்" என்ற பெயரில், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து அமைப்பொன்றை கட்டமைத்துள்ளன. இதற்கான பன்னாட்டு ஒப்பந்தபடி, இந்த 5 நாடுகளும், தங்களுக்கு கிடைக்கும் உளவுத்துறை தகவல்கள், ராணுவ உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்மூலம், பாதுகாப்பு பலப்படும்.

அண்மைகாலமாக, தென்சீன கடல், இந்திய பெருங்கடல், மத்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் ஆகியனவற்றை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சீனாவின் ஆதிக்கத்தை தடுத்தாளும் வகையில், இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஆகிய நாடுகளை கொண்ட, புதிய ஐந்து கண்கள் அமைப்பை கட்டமைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments