போட்டு பாத்துக்கலாம் வர்ரீயா..? மிரட்டல் டாக்டர்..! லோக்கல் நர்சு…!

0 780

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியரை, அரசு மருத்துவர் ஒருவர் தரக்குறைவாக பேசி வம்புக்கு இழுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்துவரும் தமிழ்செல்வன் தான் குற்றச்சாட்டுக்குள்ளானவர்.

பணி நேரத்தில் தன்னை எதிர்த்து பேசிய செவிலியரை சரமாரியாக திட்டித்தீர்த்த மருத்துவர் தமிழ்செல்வன், அடிக்க செல்வது போல அவரை விரட்டிச்சென்றும் வாக்குவாதம் செய்தார். அப்போது, ஆளை அழைத்து வந்து போட்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து செவிலியரின் கணவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, செவிலியர் கூட்டமைப்பில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் நோயாளி குறித்து முறையான பதிவு குறிப்பிடாததை சுட்டிக்காட்டிய மருத்துவரை அவமரியாதையாக பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் தமிழ்செல்வன் செவிலியருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகின்றது.

ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பொறுப்பான பதவியில் உள்ள மருத்துவர் தமிழ்ச்செல்வன், பொது இடத்தில் செவிலியரை ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி தரம் குறைந்து பேசி இருக்கக் கூடாது என்பதே சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் ஆதங்கமாக உள்ளது.  

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments