மக்களின் சேவகனான தன்னை, மக்கள் நம்ப வேண்டும் - பிரதமர் மோடி

0 293

மக்களின் சேவகனான தன்னை, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் நம்ப வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர், வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரியத்திற்கோ கலாச்சாரத்திற்கோ மொழிக்கே, உரிமைகளுக்கு பங்கம் நேர தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார்.

வடகிழக்கு மாநில மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் மோடி கூறினார்.

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து அசாமியர்கள் கவலைப்பட ஏதும் இல்லை என்று ட்விட்டர் பதிவில் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments