"மிஸ் யூனிவர்ஸ்" பிரபஞ்ச அழகியாக சொசிபினி துன்சி தேர்வு

0 550

நடப்பு ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

68வது மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் போட்டியிட்டனர். அவர்களை பின்னுக்கு தள்ளி தென்னாப்பிரிகாவை சேர்ந்த சொசிபினி துன்சி மிஸ் யுனிவர்சாக முடிசூட்டப்பட்டார்.

26 வயதான துன்சி மிஸ் தென்னாப்பிரிக்காவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 2018ம் ஆண்டில் மிஸ் யுனிவர்சாக தேர்வான பிலிப்பைன்ஸ் அழகி காட்ரியோனா கிரே, மகுடத்தை சூட்டினார்.

பியூர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் 2வது இடத்தையும், மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments