நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறிவைத்து திருடிய கும்பல் தலைவன் கைது

0 262

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை குறிவைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிவந்த கொள்ளை கும்பல் தலைவனை, கேரளாவில் வைத்து போலீசார் கைதுசெய்தனர்.

கடந்த நவம்பர் 18ஆம் தேதி, கோவை மாவட்டம் வேலந்தாவளம் அருகே வந்த லாரி ஒன்றை வழிமறித்த மர்ம கும்பல், லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச்சென்றது.

மற்றவர்கள் தப்பியோடிய நிலையில் அனஸ்பாபு என்ற கொள்ளையனை மட்டும் ரோந்து பணியில் இருந்த போலீசார் விரட்டிப் பிடித்து கைதுசெய்தனர். தப்பியோடிய கும்பலை தேடிவந்த வந்த தனிப்படை போலீசார், கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஹக்கீம் என்ற கொள்ளையனை கேரளாவில் வைத்து கைது செய்து கோவை அழைத்துவந்தனர்.

குட்கா லாரிகள், அரிசி லாரிகள் உள்ளிட்டவற்றை இக்கும்பல் வழிமறித்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ள நிலையில், கொள்ளை தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments