குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாளை அறிமுகம்

0 230

இந்தியாவில் அகதிகளாக குடியேறியுள்ள அண்டை நாடுகளைச் சேர்ந்த மதசிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த ஹிந்துகள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், பெளத்த மதத்தினர் உள்ளிட்டோர் இந்தியாவில் அகதிகளாக குடியேறியுள்ளனர். அவர்களில் 6 ஆண்டுகளாக வசிப்போருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், 1955ம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், மக்களவைக்கான நாளை அலுவல் பட்டியலில் அது சேர்க்கப்பட்டுள்ளது. அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்வார் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments