வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை தாண்டியதால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும்

0 193

வைகை அணை நீர்மட்டம் 68 அடியை தாண்டியதால் எந்த நேரத்திலும், இறுதிக்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு மூல வைகை ஆறு மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 445 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் 68 புள்ளி 88 அடியை எட்டியுள்ளது. மதுரை குடிநீருக்கு வினாடிக்கு 60 கன அடி நீரும், 58 ஆம் கால்வாய் பாசனத்துக்கு 50 கன அடியும், வைகை பாசனத்துக்கு 2 ஆயிரத்து 30 கன அடி என மொத்தம் வினாடிக்கு 2 ஆயிரத்து 140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த 3ஆம் தேதி, நீர்மட்டம் 66 அடியை தாண்டியதும், முதல் மற்றும் 2 வது கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது நீர்மட்டம் 69 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், எந்த நேரத்திலும் மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு 7 பெரிய மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments