’கிரிக்கெட்டின் மன உறுதி’ விருதை பெற்றது நியூசிலாந்து அணி..! விருதுக்கான காரணம் என்ன?

0 267

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தததால் சூப்பர் ஓவர் நடந்தது. இதுவும் டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்துள்ளதாக கூறி இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்பட்டது.

இந்த முடிவை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித மனக்கலக்கமுமின்றி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் வழங்கி கௌரவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments