13-வது ஐபிஎல் போட்டி ஏலம் : ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகல்

0 508

13-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகி உள்ளார்.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 713 பேர் இந்தியர்கள்.

மீதியுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதிலிருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள்.
உலகின் சிறந்த வேகப்பந்து வீரரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஸ்டார்க் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவர் ஏலத்தில் இருந்து விலகினார். கடந்த முறையும் அவர் ஆடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments