இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் 2024-ஆம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள் - அமித்ஷா

0 899

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அனைவரும், 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பயன்படுத்தி, வெளியேற்றப்படுவார்கள் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறியவர்களை அடையாளம் காணும் விதத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு முறை, முதல்கட்டமாக அசாம் மாநிலத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில்,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாய்பாசா என்ற் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தியாவிற்குள் ஊடுருவிய அனைவரும் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியே தூக்கி எறியப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments