8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

0 3568

கனமழை தொடர்ந்து பெய்வதால் சென்னை தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதே போன்று கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, இன்று நடைபெறுவதாக இருந்த சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments