ரேசன் கார்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

0 997

சர்க்கரை ரேசன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் வரும் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பச்சை ரேசன் கார்டுகளுக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளை ரேசன் கார்டுகளுக்கு சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விநியோகிக்கப்பட்டாலும் அரிசி வழங்கப்படுவதில்லை. இதனால் வெள்ளை ரேசன் கார்டு தாரர்கள் தங்களையும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையிலான பச்சை ரேசன்கார்டு தாரர்களாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசை கோரி வந்தனர்.

இதை அடுத்து சர்க்கரை ரேசன் கார்டுதாரர்கள், தகுதிக்கு ஏற்ப அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையிலான ரேசன்கார்டுதாரர்களாக மாற அனுமதித்து கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான விண்ணப்பங்களை  ரேசன் கார்டின் நகலுடன் இணைத்து, www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் இன்று வரை  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், அதை வரும் 29ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அனுமதித்துள்ளது. வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களிடம் நேரடியாகவும் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments