சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக சாலையைக் கடக்கும் பொதுமக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தல்

0 260

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் சாலையைக் கடப்பதற்கு சுரங்க வழிப் பாதையைப் பயன்படுத்துமாறு போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கும், பூங்கா மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் செல்வதற்கும் பொதுமக்கள் சாலையைக் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து வந்தனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் சிறு, சிறு விபத்துக்களும் நேரிட்டன.

இதற்கு தீர்வு காணும் வகையில் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகள் பூங்கா மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் செல்வதற்கு மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையை பயன்படுத்துமாறு கூறி வருகின்றனர்.

அதேபோல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் பொதுப்பணித்துறை சுரங்கப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். யாரும் சாலையைக் கடக்காத வண்ணம் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments