வடசென்னையில் 800 மெகாவாட் மின்னுற்பத்தி மார்ச்சில் தொடங்கும் - அமைச்சர் தங்கமணி

0 246

வடசென்னையில் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் உற்பத்தித் திட்டத்தை முதலமைச்சர் வரும் மார்ச் மாதம் தொடங்கி வைப்பார் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் மின்வாரிய மண்டலங்களுக்கு இடையேயான மகளிருக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி மற்றும் பலர்கலந்து கொண்டனர். பின்னர் பேசிய தங்கமணி,  படிப்படியாக அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்கும் போது 2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்திற்கு 6,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments