ஸ்மார்ட் கல்வி முறையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சென்னை மாநகராட்சிக்கு விருது

0 226

சென்னைப் பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கல்வி முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு வகுப்பறைகளை கொண்ட 28 பள்ளிகள் கட்டமைக்கப்பட்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் ஃபோரம் 2019 என்ற நிகழ்ச்சியில், ஸ்மார்ட் கல்வி முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான விருதை, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் கோவிந்தராவ் பெற்றுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments