ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி பா.ஜ.கவினர் போராட்டம்

ரஃபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், ரஃபேல் விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை ஏற்படுத்தியதற்காக, ராகுல்காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி கட்டுப்படுத்தினர்.
Comments