குழந்தைச் செல்வங்கள் நாளைய மன்னர்கள்..!

0 188

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாளைய மன்னர்களாகத் திகழப் போகும் குழந்தைகளின் சிறப்பை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பு..

சின்னஞ்சிறிய பூப்போன்ற குழந்தைகளின் கையில் தான் நாளைய சரித்திரமே எழுதப்பட இருக்கிறது. சிறுவயது முதலே குழந்தைகளுக்கு பகுத்தறிவு, பொதுவுடைமை கருத்துகளை மனத்தில் பதிய வைத்தால் அவர்களுக்கு துலங்கத் தொடங்கும் உலகம் பேதங்கள் இல்லாத பொன்னுலகமாக மாறும்.

குழந்தைகள் மீது உங்கள் லட்சியங்களைத் திணிக்காதீர்கள் என்று எச்சரிக்கின்றனர் சான்றோர்கள். "குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கலாம்- ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் வசிப்பவர்கள்; நீங்களோ கடந்த காலத்தில் வசித்தவர்கள்" என்று கூறினான் கவிஞன் ஒருவன்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, செல்போன்கள், இணைய வளர்ச்சி சின்னஞ்சிறு நெஞ்சிலும் நச்சு விதைக்க சில நேரங்களில் காரணமாகி விடுகின்றன. இதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புத்தக வாசிப்பும், முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும் நிச்சயம் உதவும்.

குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்க அரசுகள் எவ்வளவோ பாடுபட்டு வந்தாலும், குடும்ப சூழ்நிலைகள் அவ்வப்போது குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கி விடுகின்றன.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்கின்றனர் பெரியோர்கள். நடந்தவற்றை மறப்பதும் மன்னிப்பதுவும் மட்டுமே துயரங்களை அகற்றும்- இந்த வழியைத்தான் குழந்தை உள்ளம் காட்டுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் கனவு என்ன என்பதை அறிந்து, அதனை நிறைவேற்ற வேண்டியது பெற்றோரின் கடமை... குழந்தைகளின் ஆர்வம், ஆசை, அணுகுமுறை... இவற்றைக் கூர்மையாக கவனித்து தேவையானதை சரியான நேரத்தில் கொடுத்தால் அந்த குழந்தை எதிர்காலத்தில் சாதனையாளராவது நிச்சயம்...

பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசுகையில் அனைத்துப்பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், பொதுத்தேர்வில் இருந்து முதற்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படமாட்டாது என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட CEO வெளியிட்ட உத்தரவு தவறானது என்பதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments