ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

0 315

கேரளா மாநிலம் மராடு கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடைய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்ற நிலையில், தவறான குற்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி, உத்தரவில் திருத்தம் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுகினார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, மராடு குடியிருப்பை உச்சநீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டுள்ளதையும், கேரளா போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் முன்ஜாமீன் வழங்கவும் ஆட்சேபம் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, மேத்தாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments