மஹா புயலில் சிக்கி லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 58 மீனவர்கள் ஊர் திரும்பினர்

0 186

அரபி கடலில் மஹா புயலில் சிக்கி லட்சதீவில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மாவட்டத்தைச்சேர்ந்த 58 மீனவர்கள் 12 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பினார்கள்.

அரபிக்கடலில் கடந்த வாரம் மஹாபுயல் உருவானது.

அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பிய நிலையில், தூத்தூர் கிராமத்தில் இருந்து ஐந்து விசைப்படகுகளில் சென்ற 58 மீனவர்கள் லட்சத்தீவு கல்பனை பகுதியில் கரை ஒதுங்கி இருந்தனர். அவர்கள் 12 நாட்களுக்கு பிறகு 4 படகுகளில் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

தங்களுக்கு முறையாக புயல் எச்சரிக்கை கிடைக்கவில்லை என்றும், ஒரு படகு லட்சதீவில் சேதமடைந்து தரை தட்டி நிற்பற்பதாகவும், அதில் சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments