டோக்கியோவில் தொடங்கியுள்ள ‘கார் கண்காட்சி’

0 198

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

காற்றுமாசு விதிகளை உலக நாடுகள் கடுமையாக்கியதை அடுத்து, கார் நிறுவனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் போட்டிப்போட்டு வருகின்றன.

அந்தவகையில் ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் சிறிய அளவிலான மின்சார கார்களை அறிமுகம் செய்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின்சார கார்களை காட்சிப்படுத்தும் கார் கண்காட்சி இன்று டோக்கியோவில் தொடங்கியது. இதில் நிசான், டொயாட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் விதவிதமான மின்சார கார்களை காட்சிப்படுத்தப்பட்டன.

முதியவர்கள் சிறிய தெருக்களில் ஓட்டி செல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இரு இருக்கை கொண்ட கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments