ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது

0 150

கோவையில் ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு நெல்லையைச் சேர்ந்த ஜெகநாதனுடன் 2015 ஆம் ஆண்டு அறிமுகம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மின் மோட்டார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த ராஜேந்திரன், அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் என 10 பேருக்கு ரயில்வே வேலை வாங்கி தருவதாக ஜெகநாதன் கூறியதாகவும் அதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தை ராஜேந்திரனிடம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் போலி நியமன ஆணையை கொடுத்து விட்டு பணத்துடன் ஜெகநாதன் தலைமறைவாகிவிட்டதாக ராஜேந்திரன் ரயில்வே போலீசில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து  4 ஆண்டுகளுக்காக விசாரணை நடத்தி வந்த போலீசார், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் மளிகைக்கடை நடத்தி வந்த ஜெகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments