பார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு கொண்டாட்டம்

0 199

பார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு, அதன் கனவு இல்லத்தில் ரசிகர்கள் தங்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

குழந்தைகள் அதிகம் விரும்பி ரசித்து விளையாடும் பார்பி பொம்மையை அமெரிக்காவை சேர்ந்த ரூத் ஹாண்ட்லர் என்பவர் கடந்த 1959வது ஆண்டு உருவாக்கினார்.

இளம் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள பார்பி பொம்மை, இந்தாண்டு தனது 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு மனிலாவில் உள்ள பார்பியின் கனவு இல்லத்தில், அதன் ரசிகர்கள் ‘விருந்தினர்களாக’ தங்கி செல்லும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. கடற்கரையோரம் உள்ள கனவு இல்லத்தில் 4 படுக்கை அறைகள், தியான அறை, பொழுதுபோக்கு ஸ்டுடியோ உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 27 முதல் 29ம் தேதி வரை அந்த இல்லத்தில் தங்க விரும்புவோர் Airbnb என்ற செயலி மூலம் அக்டோபர் 23ம் தேதி விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு இரவுக்கு இந்திய மதிப்பில் 4,272 ரூபாய் வீதம் இரு இரவுக்கான வாடகை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments