பாட்னாவில் மத்திய அமைச்சர் மீது மை தெளிப்பு

0 268

பீகார் தலைநகர் பாட்னாவில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மை தெளிக்கப்பட்டதால் அவர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். 

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரிப்பதற்காக அஸ்வினி சவுபே அங்கு சென்றார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நபர், அமைச்சர் மீது மை தெளித்தார். இதை அடுத்து உடனடியாக காரில் ஏறிய அமைச்சர் அஸ்வினி சவுபே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஜனநாயகத்தின் தூண் மீது மை தெளிக்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments