போக்குவரத்துக் காவலர்களை தாக்க முயன்ற வழக்கறிஞர்

0 408

சென்னை பாண்டிபஜார் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை தாக்க முயன்ற வழக்கறிஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாண்டி பஜார் காவல் நிலையம் பின்புறம் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சேகர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் குடிபோதையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை சேகர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

போக்குவரத்து காவலர்கள் அவரை சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஒட்டி தாம் ஒரு வழக்கறிஞர் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்கறிஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments