மருத்துவ கண்டுபிடிப்பு 3 பேருக்கு நோபல் பரிசு.!

0 611

ருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மூன்று பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டைனமைட் உள்ளிட்ட 355 பொருட்களை தயாரித்து பெரும் பொருள் ஈட்டிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல், தமது மறைவுக்கு பின்னர், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்க உயில் எழுதி வைத்திருந்தார்.

இதன் படி கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டு, மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் குழுவினர் இந்த ஆண்டு பரிசுக்குரியவர்களை அறிவித்தனர்.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வில்லியம் ஜி காலின், கிரேக் எல் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிப் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆய்வாளர் காலின் அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் ஹக்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செமன்சா, ஜான் ஹோப்கின்ஸ் செல் பொறியியல் நிறுவனத்தில் நுரையீரல் தொடர்பான ஆய்வு திட்டத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

ராட்கிளிப், லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் கல்வி மையத்தில் மருத்துவ ஆய்வு பிரிவு இயக்குநராக இருந்து வருகிறார். டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.இந்த மூன்று ஆய்வாளர்களும் 6.52 கோடி ரூபாய் பரிசை சரிசமமாகப் பிரித்துக்கொள்வார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் மூன்றுபேரும், மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை உணர்ந்து, எடுத்துக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளனர். ஆக்சிஜன் எப்படி செல்களின் வளர்சிதை மாற்ற மற்றும் உடலியல் செயல்பாடுகளில் பங்காற்றுகிறது என்பதை மூன்று பேரும் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளதாக நோபல் பரிசுக்குழு கூறியுள்ளது.
உடலில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும் போது, எரித்ரோப்டின் என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்குகிறது.

இந்த ஹார்மோன் ரத்த த்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் அதிக அளவிலான சிவப்பு அணுக்கள் கூடுதல் ஆக்சிஜனை கிரக்கித்து, உடலின் ஆக்சிஜன் தேவையை ஈடுகட்டுகிறது. இந்த அறிவியில் உண்மை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டது. ஆனால் எரித்ரோப்டின் சுரப்பு நிகழ எது காரணம் என்பதையை மூன்று பேரும் கண்டறிந்து உள்ளனர்.

ஆக்சிஜன் அளவு ரத்த த்தில் குறையும் போது, ரத்த த்தில் உள்ள புரத கூட்டுப் பொருளான ஹெச்.ஐ.எப். அளவு மிக வேகமாக அதிகரிக்கிறது. இது எரித்ரோப்டின் ஹார்மோன் சுரப்பை தூண்டி, ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதாக விஞ்ஞானிகள் மூவரும் கண்டறிந்து உள்ளனர். ஆக்சிஜன் அளவு போதுமானதாக இருக்கும் போது, புரத கூட்டுப் பொருள், வேகமாக ரத்தத்தில் கரைந்து கலப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்தசோகை, புற்றுநோய் பக்கவாதம், தீவிரமான நோய்வாய்ப்படுதல் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வுகாண மூன்று பேரின் கண்டுபிடிப்புகளும் உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே 8-ஆம் தேதி இயற்பியலுக்கும், 9-ஆம் தேதி வேதியியலுக்கும் நோபல் பரிசும், 10-ஆம் தேதி இலக்கியத்துக்கான நோபல் பரிசும், 11 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments