இந்தியாவில் எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது - ஜக்கி வாசுதேவ்

0 251

மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது என்று புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக காவிரி கூக்குரல் என்ற பெயரில் இருசக்கர பேரணியை ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ் மேற்கொண்டுள்ளார். கடந்த 3 ஆம் தேதி தலைகாவிரியில் தொடங்கிய இந்த பேரணி பல முக்கிய நகரங்கள் வழியாக பயணித்து இன்று புதுச்சேரி வந்தடைந்தது. இந்த நிலையில் ராஜ்நிவாஸ் அலுவலகம் வந்த ஜக்கிவாசுதேவுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சிறப்பான வரவேற்பு அளித்து பின்னர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

தொடர்ந்து கம்பன் கலையரங்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் சத்குரு ஜக்கிவாசுதேவ், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி, காவிரி கூக்குரல் வெற்றி பெற புதுச்சேரி அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.

காவிரியின் கடைமடையான காரைக்காலில் புதுச்சேரி அரசே மரங்களை நடும் என்றும் நாராயணசாமி உறுதியளித்தார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சத்குரு ஜக்கிவாசுதேவ், இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழிகளுக்கும் தனிச் சிறப்பு உள்ளதால் இந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments