புதுச்சேரி துணை சபாநாயகர் தேர்தல் செப். 5-ல் நடக்கிறது - சபாநாயகர்

0 176

புதுச்சேரியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு வரும் செப்டம்பர் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

இப்பதவிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் போட்டியிட உள்ளார். அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டதால், துணைசபாநாயகரான சிவக்கொழுந்து ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு வரும் செப்டம்பர் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இப்பதவிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் போட்டியிட உள்ளதால், அவர் வகிக்கும் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பதவியை ராஜினமா செய்து, முதல் அமைச்சர் நாராயணசாமியிடம் கடிதம் வழங்கியுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் போதிய பலம் இல்லாததால், பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments