அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம்

0 622

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து, சுவீடன் நாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

7 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ள அவர், முதலில் பின்லாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர், பின்லாந்து நாட்டின் பள்ளி கல்விமுறை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டு அறிவதோடு, பள்ளிகளையும் பார்வையிடுகிறார்.

பின்லாந்து நாட்டில் 3 சதவிகித பள்ளிகள் மட்டுமே தனியாரால் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 97 சதவிகித பள்ளிகளை அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்துகின்றன. அந்த நாட்டில் 6 வயதில் பள்ளிசெல்லும் நிலையில் 6 வயதான குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

7 வயதான அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்கும் சட்டம் அமலில் உள்ள நிலையில், 7 வயது முதல் 16 வயது வரையில் பின்லாந்து நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் 9 ஆண்டு பள்ளிக் கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும்.

மேலும் பள்ளிக் கல்வி முறையில் உலகிலேயே பின்லாந்து தான் முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு பள்ளிக் கல்விமுறையை அறிந்து வர கல்வித்துறை அதிகாரிகளுடன் செங்கோட்டையன் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments