உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை தயார்

0 241

அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

போட்டிகளுக்கான அட்டவணையை முடிவு செய்வது குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் மாதம் 5-ஆம் தேதி ஆட உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் இந்த  போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பிற அணிகளுடன் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments