அமெரிக்கா, பிரிட்டனுக்கு முதலமைச்சர் பயணம்..!

0 1153

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி, தொழில், உணவு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி.சம்பத், காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அந்தந்த துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இம்மாதம் 28ஆம் தேதி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆல்லோசிக்கப்பட்டது.  அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய அம்சமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வரும் 28ஆம் தேதி வெளிநாடு புறப்படும் முதலமைச்சர் அடுத்த மாதம் 8ஆம் தேதி தமிழகம் திரும்புவார். இதனிடையே டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர் ஹித்தேஷ் குமார் மக்வானா, அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பர்கீஸ் ஆகியோரும் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வெளிநாட்டுப் பயணத் திட்டம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இருப்பினும் முதலமைச்சரின் பயணத் திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments