இந்திய ஆட்டோமொபைல் துறையில் 4 மாதங்களில் 3.5 லட்சம் பேர் வேலையிழப்பு

0 1775

இந்திய ஆட்டோமொபைல் துறையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல், தற்போது வரையிலான காலகட்டத்தில், மூன்றரை லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை எனப்படும், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி துறை, கடந்த ஆண்டு முதலே, மோசமான பின்னடைவை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.

மாருதி சுசூகி, ஹோண்டா, டாடா, மஹிந்ரா உட்பட பல வாகன உற்பத்தி நிறுவனங்கள், வாரத்தில், சில நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாகவும், ஒப்பந்த ஊழியர்களுக்கான ஷிப்டுகளை குறைப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றிய 15 ஆயிரம் பேர் வேலையிழந்திருப்பதாகவும், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியில் ஈடுபடும் ஒரு லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதவிர, ஆட்டோ மொபைல் துறையில், மிக முக்கிய பங்கு வகிக்கும், கார், பைக் டீலர்கள், ஏஜென்சிகளில் தான் வேலைவாய்ப்புகள் அதிகம் என்றும், இந்த வகையில், கார் டீலர்கள், ஏஜென்சிகளில் பணியாற்றி 2 லட்சம் பேர் வரையில் வேலையிழந்திருப்பதாகவும், தகவல் வெளியாகியிருக்கிறது. இவ்வாறு, இந்திய வாகன உற்பத்தி மற்றும் விற்பனை துறையில், வெறும் 4 மாதத்தில், மூன்றரை லட்சம் பேர் வேலையிழந்திருப்பது, தொழில் முனைவோர், மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments