அரசு ஊழியர் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

0 333

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பண்டிகைக் கால முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சட்டப் பேரவையில் நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார். தொகையை உயர்த்தினாலும், பண்டிகைக்கால முன்பணத்தை பெறுவதற்கான நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இனி வரும் பண்டிகைகள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments