நாடகத்தில் வளர்ந்து, திரைத்துறையின் சாதனை நாயகனாய் உயர்ந்த சிவாஜி கணேசனின் நினைவு நாள்..!

0 578

மிழ் திரையுலகில் நிகரற்ற தனி முத்திரை பதித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்18 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

1928 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் பிறந்து, கணேசன் என்ற பெயருடன் சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து, அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தில் நடித்ததால், சிவாஜி கணேசனாய் மாறி, பராசக்தி திரைப்படம் மூலமாக திரையுலகில் ஆழமாய் கால் பதித்தவர் நடிகர் திலகம்.....

ஏழை, பணக்காரகளில் எத்தனை வகையோ அத்தனை வகையும், பக்தன், குடிகாரன், பித்தன், பேரறிவாளன், மன்னன், விடுதலை வீரன் என இவர் ஏற்காத பாத்திரங்களே இல்லை. திரையுலகில் மட்டும் 44 ஆண்டுகளில் 275 தமிழ் படங்கள் மற்றும் சில வேற்று மொழிப் படங்களில் தனி முத்திரை பதித்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 18-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதனைமுன்னிட்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மறைந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் ரசிகர்கள் மனதில் வாழும் வரை தங்களுடன் தான் இருப்பதாக கருதுவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments