உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்கா வெற்றி

0 614

மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்கா மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் பிரான்சின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தன. லியான் நகரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை நடப்பு சாம்பியனான அமெரிக்கா சந்தித்தது.

முதல் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 61வது நிமிடத்தில் அமெரிக்காவுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்ததால், அந்த அணியின் மேகன் பந்தை வலைக்குள் அனுப்பினார். 69வது நிமிடத்தில் ரோஸ் ஒரு கோல் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.

பதிலுக்கு கோல் அடிக்க நெதர்லாந்து மேற்கொண்ட முயற்சி கடைசி வரை பலனளிக்கவில்லை. முடிவில், அமெரிக்கா 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  இதன் மூலம், நான்காவது முறையாக அமெரிக்க அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவின் வெற்றியை மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments