பவானி ஆற்றுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் யானைகள்

0 670

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் பவானி ஆற்றுக்கு குடிநீர் தேடி கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக எல்லைகள் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பிலிகிரி ரங்கசாமி வன உயிரின சரணாலயத்தை ஒட்டி இருப்பதால் அங்கிருந்து யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சியால் பள்ளங்கள், தடுப்பணைகள், வனக்குட்டைகள் உள்ளிட்டவை வற்றிவிட்டதால் யானைகள் பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதி, மாயாறு என இரண்டு இடங்களுக்குப் படையெடுக்கின்றன.

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ப்போர் யானைகள் நடமாட்டத்தைக் கருதி கவனத்துடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments