கட் அவுட் பாலாபிசேகம் அடுத்த டார்கெட் அஜீத்..! சிம்புவை மறந்த சீமான்

0 9727

தனது கட் அவுட்டுக்கு அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு ரசிகர்களிடம் நடிகர் சிலம்பரசன் வேண்டு கோள் விடுத்த நிலையில் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவது பைத்தியக்காரதனம் என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்

தமிழகம் மட்டுமல்ல கேரளாவிலும் தங்கள் அபிமான நடிகர்களின் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பால் ஊற்றுவது ஆண்டாண்டு காலமாக தொடரத்தான் செய்கிறது. 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உற்சாக மிகுதியாலும் சம்பந்தபட்ட நடிகர்கள் மீது கொண்டுள்ள வெற்றிதனமான அன்பாலும் அந்த அறிவுரைகளை ரசிகர்கள் ஏற்பதில்லை

தமிழ் திரை உலக வரலாற்றில் நடிகர் சிம்புவை தவிர எந்த ஒரு நடிகரும், தங்களது கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்ய சொல்லி ரசிகர்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் வைத்ததில்லை.

இந்த நிலையில் நடிகர் அஜீத்குமார் ரசிகர்கள் மட்டுமே கட் அவுட்களுக்கு பாலாபிசேகம் செய்வது போல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்

பாலின் பயனை எடுத்துரைத்த சீமான், அதனை கட் அவுட்டில் ஊற்றும் ரசிகர்களின் செயல் பைத்தியகாரத்தனம் என்று கடுமையாக சாடினார்


சீமான் இயக்கத்தில், சிம்பு 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதால், அண்டா கணக்கில் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் ஊற்ற சொன்ன சிம்பு குறித்து ஒரு வார்த்தை கூட சீமான் கண்டித்து பேசவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது....

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments