கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்ற சொன்ன சிம்பு... பால் கேன்களுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரகத்தில் புகார்

0 1335

தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் பால் முகவர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.

தனது கட் அவுட்டுகளுக்கு அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு தனது ரசிகர்களை சிம்பு கேட்டுக் கொள்ளும் வீடியோ வெளியாகி இருந்தது. ஏற்கெனவே பால் கேன்கள் திருடு போய் கொண்டிருக்கும் சூழலில், அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு சிம்பு கூறி இருப்பதால் அவரது ரசிகர்கள் பால் கேன்களை திருட வாய்ப்பு இருப்பதாக பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். ரசிகர்களை தவறான பாதைக்கு தூண்டும் சிம்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments