நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்த செரினா வில்லியம்ஸ்

0 793

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் தான் ஏமாற்றியதாக நடுவர் கூறிய குற்றச்சாட்டு அபாண்டமானது என அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா ஆறுக்கு இரண்டு, ஆறுக்கு நான்கு என்கிற நேர் செட்களில் தோற்கடித்தார்.

போட்டியின் இடையே செரீனாவின் பயிற்சியாளர் அவருக்கு விளையாட்டு உத்திகளைச் சொல்லிக்கொடுத்து விதிகளை மீறியதாக நடுவர் கார்லோஸ் ரமோஸ் குற்றஞ்சாட்டினார். இதைப் பயிற்சியாளர் ஒப்புக் கொண்டபோதும் செரீனா இல்லையென மறுத்தார்.

இதையடுத்து செரீனா ஏமாற்றுவதாக நடுவர் தெரிவித்தார். இதனால் ஆவேசமடைந்த செரீனா நடுவரைப் பொய்யர் என்றும் திருடன் என்றும் கடுமையாகப் பேசினார். இதனிடையே போட்டியில் பின்னடைவைச் சந்தித்த செரீனா ஆத்திரத்தில் தனது டென்னிஸ் ராக்கெட்டைக் கீழே எறிந்து உடைத்தார்.

போட்டியின்போது பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெற்ற விதிமீறலுக்காகவும், களத்திலேயே டென்னிஸ் ராக்கெட்டைப் போட்டு உடைத்ததற்காகவும் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments