கர்நாடகத்தின் குடகு, மைசூர், சாமராஜநகர் மாவட்டங்களில் வெள்ள அபாயம்

0 322

மைசூர், மாண்டியா, சாமராஜநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பத்ரா அணை நிரம்பிவழிகிறது.

குடகு, தெற்குக் கன்னட, ஹசன், சிக்மகளூர், சிவமோகா, மைசூர், சாமராஜநகர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.இதனால்  பெங்களூரில் இருந்து கேரளத்தின் கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு நகரங்களுக்கும், மங்களூர், சுப்பிரமணிய, தர்மஸ்தலா, குந்தப்பூர் ஆகிய நகரங்களுக்கும் பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments